இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

WelcomeDelivery.com - மளிகை பொருட்களை மலிவான விலையில் வாங்கலாம் வாங்க...!


அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்...!

சென்னையை சேர்ந்த எனது நண்பர் ஒருவர் மளிகை பொருட்களை வெப்சைட் மூலமாக விற்கும் தொழிலினை புதிய முயற்சியாக துவங்கியுள்ளார். அனைத்து விதமான மளிகை பொருட்களையும் MRP விலையைவிட குறைந்த விலையில் கொடுப்பதே அவரது நோக்கமாகும். அதன்படிதான் அனைத்து பொருட்களையும் சலுகை விலையில் விற்றும் வருகிறார்.

தற்போதைய நிலையில் சென்னையில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இவரது இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் சென்னையின் அனைத்து பாகங்களுக்கும் சேவையை விரிவுபடுத்தும் திட்டமும் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, மளிகை பொருட்களைப்போல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் ஆடைகளையும் சலுகை விலையில் கொடுக்கும் திட்டமும் வைத்துள்ளார்.

WelcomeDelivery.com இன் சேவை கிடைக்கப்பெறும் பகுதிகள்.

  1. Peramanur
  2. Singa Perumal Koil
  3. Maramalai Nagar
  4. Mahindracity
  5. Kattankulathur
  6. Potheri
இந்த பகுதிகளில் இருந்து கிடைக்கும் வரவேற்பினை பொருத்து மற்றபகுதிகளுக்கும் WelcomeDelivery சேவையினை விரிவுபடுத்த திட்டம் வைத்துள்ளனர். உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாராவது இந்த பகுதிகளில் வசித்து வந்தால் அவர்களிடம் இந்த தகவலினை பகிர்ந்துகொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கு உதவி செய்தது போலவும் இருக்கும் ஒரு புதிய சேவையினை ஊக்குவித்தது போலவும் இருக்கும்.

WelcomeDelivery இன் சிறப்பம்சங்கள்:

சலுகை விலையில் பொருட்கள் : அனைத்து பொருட்களும் சலுகை விலையில் கிடைக்கும். குறைந்த அளவில் பொருட்களை வாங்குபவர்களுக்கு சேமிக்கும் பணத்தின் அளவு குறைவு என்றாலும் அதிக அளவில் பொருட்களை வாங்குபவர்களுக்கு நிச்சயம் சேமிக்கும் பணத்தின் அளவு அதிமாக இருக்கும்.

எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை : நமக்கு தேவையான பொருட்களை வாங்க கடையாக ஏறி இறங்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே மொபைல் மூலமாகவோ அல்லது கம்பயூட்டர் மூலமாகவோ எளிதில் உங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் கொடுத்துவிடலாம்.

நேரம் மிச்சம் : நீங்கள் நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்களை ஆர்டர் கொடுக்கும்போது கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வெகு நேரம் வீணாகும். இதற்க்கு கடை நிர்வாகத்தையோ அல்லது அங்கு வேலை பார்பவர்களையோ குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொரு கஸ்டமரிடமும் தனித்தனியாக ஆர்டர் எடுத்து அவர்களை ஒவ்வொருவராக அனுப்ப லேட் ஆகும்.

ஆனால் WelcomeDelivery பொறுத்தவரையில் அனைத்து பொருட்களும் அவர்களது இணையதளமான WelcomeDelivery.com இல் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை எளிதில் கிளிக் செய்வதன் மூலம் ஆர்டர் செய்துவிடலாம். இதனால் உங்களுக்கு அலைச்சலும் நேரமும் மிச்சமாகிறது.

வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் (Door Delivery) : WelcomeDelivery இல் நீங்கள் பொருட்களை ஆர்டர் செய்தபிறகு நாம் ஆர்டர் செய்த பொருட்களை யார் வீட்டுக்கு கொண்டு வருவார்கள் என்று நீங்கள் கவலை கொள்ளத்தேவையில்லை. நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் அனைத்தும் உங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து தரப்படும்.

பொருள் வந்தவுடன் பணம் கொடுத்தால் போதும் (Cash On Delivery) : நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் உங்கள் வீட்டுக்கு வரும் முன்னரே பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பொருட்களை உங்களிடம் ஒப்படைத்தபிறகு பணம் கொடுத்தால் போதும்.

WelcomeDelivery வெப்சைட்டிற்கு செல்ல : WelcomeDelivery.com

Tags : Online Stores In Chennai, Online Grocery Stores In Chennai, Online Grocery Shops In Tamil Nadu, How To Purchase Grocery Products Online, How To Purchase Kitchen Items Online In Tamil Nadu

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்...!


விவசாயம் செழித்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் பன்மடங்கு பெருகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே உணவுப்பொருட்களுக்காக நாம் எந்த நாட்டிடமும் கையேந்தி நிற்கவேண்டிய அவசியமும் ஏற்படாது.

நமது நாட்டில் வருடத்தின் 90% நாட்களில் சூரிய ஒளி கண்டிப்பாக கிடைத்துக்கொண்டேதான் உள்ளது. மின்தட்டுப்பாட்டை போக்க ஒரேவழி சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது மட்டுமே. மின் தட்டுப்பாட்டினால் அவதிப்படும்  விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எண்ணுகின்றேன்.

சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.
ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.

20 சதவிகிதம் மட்டும் கட்டினால் போதுமானது என்கிற பொழுது மொத்த செலவே ரூ.100000 க்கும் குறைவாகவே வரும்.

தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.

மின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.

நானும் கீழே உள்ள போன் நம்பருக்கு தொடர்புகொண்டு விசாரித்து பார்த்தேன். அவர்கள் உங்கள் தாலுக்கவிலுள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளுங்கள். செல்லும்போது சிட்டா அடங்கல் மற்றும் வாய்தா ரசீது உடன் கொண்டு செல்லுங்கள் என்றும் கூறினார். நானும் இன்னும் ஓரிரு நாட்களில் சென்று விசாரித்து பார்க்கலாம் என்று இருக்கின்றேன்..

கூடுதல் தகவல்களுக்கு:
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone - 044 - 2435 2686, 044- 2435 2622
email : aedce.tn@nic.in
http://www.aed.tn.gov.in/SS_Solar_pumps.htm
http://www.aed.tn.gov.in/

Solar Water Pumps In Tamil Nadu, Free Solar Water Pump In Tamil Nadu, Tamil Nadu Government Solar Water Pumps

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய கொஞ்சம் மாத்தியோசிங்க....?


தற்போதைய நிலையில் ஒவ்வொரு தொழிலும் உள்ள போட்டியினை கணக்கிட்டு பார்த்தால் புதிதாக தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு கண்ணை கட்டும் அளவிற்கு போட்டியாளர்கள் அவர்களுக்கு முன்னால் இருப்பார்.

ஆனாலும் புதிய ஐடியாக்களும் முயற்சியும் உங்களிடம் இருந்தாலே போதும் நீங்கள்தான் அந்த தொழிலில் சூப்பர்ஸ்டார். காலத்திற்கு தகுந்தாற்போல் புதிய ஐடியாக்களை நீங்கள்தான் நன்றாக யோசித்து செயல்படுத்தவேண்டும்.

அதற்க்கு சிறந்த உதாரணமாக கீழே உள்ள படத்தை பார்த்துவிட்டு நான் எழுதியுள்ள விஷயத்தை படியுங்கள் உங்களுக்கே நன்றாக விளங்கும்.


மேலே உள்ள படத்தை பார்த்தவுடன் சாதரணமாக யோசிப்பவர்களுக்கு என்னடா இவனுக இப்படி கிறுக்குத்தனமா பண்ணிட்டு இருக்கானுகன்னு தோணும். அதே கொஞ்சம் அட்வான்சா திங்க் பண்ணுறவங்க எப்படி யோசிப்பாங்கன்னா,

"அந்த அந்த நடிகர்களின் ரசிகர்கள் அவர்களது அபிமான ரசிகர்களின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்த இந்த மாதிரி பண்ணுகின்றனர். ஒரு நடிகரின் படம் ரிலீஸ் ஆகும்போது இந்த படத்தில் உள்ளதுபோல் ஸ்டிக்கர்களும் பேனர்களும் பிரின்ட் போட்டு தரும்போது பிரிண்டிங் தொழில் செய்பவர்களுக்கு சேல்ஸ் அதிகமாகும் வருமானமும் அதிகமாகும்."

இதேபோல் உங்கள் தொழில் சம்பந்தமாக கொஞ்சம் மாத்தி யோசிச்சு பாருங்க நண்பர்களே...! வெற்றி உங்களுடையதே...!

Business Improvement Tips In Tamil, Successful Business Tips In Tamil Language, How To Promote A Business In Tamil Nadu

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு வழிகாட்டும் ஒரு முயற்சி...!


அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்...!

கல்லூரி படிப்பினை முடித்தவுடன் வேலை கிடைத்துவிடும் படிப்பிற்கு வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்கிற கனவுகளுடன் கல்லூரிபடிப்பை முடித்துவரும் மாணவர்களுக்கு கிடைக்கும் முதல் ஏமாற்றமே கேம்பஸ் இன்டர்வியூ வில் வரும் பல கம்பெனிகளும் ஒருசிலரை மட்டும் எடுத்துவிட்டு மற்றவர்களுக்கு டாட்டா காட்டிவிடுவதுதான்.

கேம்பஸ் இன்டர்வியூ போனால் போகட்டும் சொந்த முயற்ச்சியில் வேலை தேடலாம் என்று பல கம்பனிகள் ஏறி இறங்கினால் கடைசியாக கிடைக்கும் வேலையோ ஆறாயிரம் ஏழாயிரம் என்கிற சொற்ப சம்பளத்தில். நான்கு இலட்சம் செலவுசெய்து படித்து ஆறாயிரம் ஏழாயிரம் சம்பளம் வாங்கினால் அது வட்டிகட்டகூட பத்தாது என்பதுதான் உண்மை நிலை.

அவர்களது திறமைக்கு தகுந்த வேலையினை பெற நம்மால் முடிந்த உதவியினை செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். இதற்கென புதியதாக ஒரு வெப்சைட் ஆரம்பித்து வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை அதன் மூலம் பப்ளிஷ் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளேன். இந்த வேப்சைட்டானது யார் வேண்டுமானாலும் இணைந்து அவர்களுக்கு தெரிந்த வேலைவாய்ப்புகளைப்பற்றிய விபரங்களை பதிவுடும் சிறப்பம்சத்துடனும் இருக்கும்.

ஏனென்றால் என் ஒருவனால் மட்டுமே அனைவருக்கும் தேவைப்படும் வேலைவாய்ப்புகளை திரட்டி தரமுடியாது. நான் வேலை செய்யும் நிறுவனத்திலோ அல்லது எனது நண்பர்கள் வேலை செய்யும் நிறுவனத்திலோ இருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் நான் கேள்விப்படும் வேலைவாய்ப்புகள் தொடர்பான விபரங்களை பதிவிட முடியும். அதேபோல் நீங்களும் நீங்கள் செய்யும் நிறுவனத்திலோ அல்லது உங்களது  நண்பர்கள் வேலை செய்யும் நிறுவனத்திலோ இருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் நீங்கள்  கேள்விப்படும் வேலைவாய்ப்புகள் தொடர்பான விபரங்களையும் பதிவிட முடியும்.

அதேசமயம் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களும் அவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அவர்களது Resume ஐ அப்லோட் செய்ய முடியும். வேலைக்கு ஆட்கள் தேவைப்படுபவர்களும் Resume ஐ பார்த்து அவர்களுக்கே தேவையான அவர்களது வேலைக்கு தகுந்த நபர்களை எடுத்துக்கொள்ள முடியும்.

இதுதான் நண்பர்களே எனது PLAN. உங்களது யோசனைகளும் கருத்துக்களும் வரவேற்க்கப்படுகின்றன. எனது இந்த முயற்சி பற்றிய உங்களது கருத்துக்களையும் யோசனைகளையும் இங்கே கீழே உள்ள Comments மூலம் தெரிவிக்கலாம். எனக்குதோன்றாத ஏதாவது புதிய ஐடியாக்கள் உங்கள் மனதிலும் இருக்கலாம் அல்லவா நண்பர்களே...?

அதேபோல் என்னுடன் இணைந்து செயல்பட விரும்பும் நண்பர்களும் Email மூலம் தெரிவிக்கலாம். வெப்சைட் கிரியேட் செய்வது அதனை டிசைன் செய்வது போன்றவற்றை நான் கவனித்துக்கொள்வேன். வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை பதிய உங்களின் உதவியும் தேவைப்படுகின்றது நண்பர்களே...!

எனது ஈமெயில் : p.sathikdm@gmail.com

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் உள்ள நமது நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி?


என்னதான் நமது அன்றாட வாழ்வில் பேஸ்புக் உபயோகித்து வந்தாலும் அவர்கள் வழங்கும் பல பயன்பாடுகளை பயன்படுத்தாமல் சிறு சிறு விஷயங்களுக்காக கூட திணறி வருகின்றோம். அவற்றில் ஒரு முக்கிய பயன்பாடான நமது நண்பர்கள் பேஸ்புக்கில் உள்ளார்களா என்பதை கண்டறிந்து அவர்களை நமது பேஸ்புக்கில் நண்பர்களாக இணைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் காணப்போகின்றோம்.

நமக்கு தெரிந்தவர்களை அவர்களது மொபைல் எண் அல்லது ஈமெயில் ஐடி யை வைத்து அவர்கள் பேஸ்புக்கில் அகௌன்ட் வைத்துள்ளார்களா இல்லையா என்பதனை கண்டறிந்து அவர்களை நமது பேஸ்புக் அகௌண்டில் நண்பராக இணைக்க முடியும்.

கீழே உள்ள படத்தில் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள பெட்டியில் உங்களுக்கு தெரிந்தவர்களின் மொபைல் எண் அல்லது ஈமெயில் ஐடி யினை டைப் செய்தால் அவர்களுக்கு ஏற்கனவே பேஸ்புக்கில் அகௌன்ட் இருக்கும்பட்சத்தில் அவர்களது பெயரினை கீழே காமிக்கும். உடனே நீங்கள் அவர்களது பெயரின் மீது கிளிக் செய்து நண்பராக இணைத்துக்கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோவினை பார்க்கவும்


Tags : Tamil Facebook Tricks, Facebook Tricks In Tamil

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச வெப்டிசைனிங் பயிற்சி வகுப்புகள்...!வணக்கம் நண்பர்களே...!

ஈமெயில், பேஸ்புக் போன்ற சேவைகளை எப்படி நாம் ஆன்லைனில் இலவசமாக உபயோகப்படுத்தி மகிழ்கின்றோமோ அதேபோல் வெப்டிசைனிங் பயிற்சியையும் ஆன்லைனிலேயே இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும். அதுவும் உங்களுக்கு எளிதில் புரியும்வண்ணம் அனைத்து பயிற்ச்சிகளும் தமிழிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள அனைத்து பார்ட்களையும் பொறுமையாக பார்த்து வெற்றிகரமாக பயிர்ச்சிசெய்து பார்த்துவிட்டீர்கள் என்றால் உங்களாலும் மற்றவர்களுக்கு வெப்சைட் டிசைனிங் செய்து தரமுடியும். வெப்சைட் டிசைன் செய்வதை ஒரு தொழிலாகக்கூட செய்யமுடியும்.

நீங்கள் ஒரு கம்பயூட்டர் சென்டருக்கு வெப்டிசைனிங் கற்றுக்கொள்ள சென்றால் எவ்வளவு காலம் பிடிக்குமோ அதைவிட குறுகிய காலத்தில் இந்த இலவச பயிற்சியின் மூலம் உங்களால் தெளிவாக கற்றுக்கொள்ள முடியும்.

தமிழில் வெப்டிசைன் பகுதி 1 - Basic

தமிழில் வெப்டிசைன் பகுதி 2 - Complete HTML Training

தமிழில் வெப்டிசைன் பகுதி 3 - Dreamweaver Training

தமிழில் வெப்டிசைன் பகுதி 4 - Serif Webplus Training

தமிழில் வெப்டிசைன் பகுதி 5 - WordPress Training

நீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...

Tags : Website Designing Training In Tamil, Free Web Designing Training In Tamil Nadu, Online Web Designing Training Videos In Tamil

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

Serif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?Serif Webplus ம் Dreamweaver போன்றே ஒரு வெப்சைட் டிசைன் செய்யப் பயன்படும் ஒரு சாப்ட்வேர் ஆகும். ஆனால் இந்த சாப்ட்வேர் ஆனது Dreamweaver இல் இருந்து முற்றிலும் மாறுபட்டது. HTML, CSS தெரியாதவர்கள் கூட Serif Webplus உபயோகபடுத்தி மிகவும் எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்யமுடியும்.

Serif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை நான் இந்த வீடியோ மூலம் விளக்கியுள்ளேன். இது கொஞ்சம் பழைய வீடியோதான். தற்போது வந்துள்ள Serif Webplus புது Version களில் இன்னும் நிறைய Tools களும் Option களும் உள்ளன.

நீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...
Tags : Serif Webplus Web Designing Training In Tamil, Free Web Designing Training Using Serif Webplus Software, Online Tamil Website Designing Training

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.