இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் நிறுவ என்ன என்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?


ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்னவென்பதை முந்தைய பதிவிலேயே பார்த்துவிட்டோம். ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

உங்களுக்கும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் ஒன்றினை துவங்கும் எண்ணம் இருப்பின் நீங்கள் கண்டிப்பாக கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றியே ஆகவேண்டும்.

வெப்சைட் டிஸைன்

வெப்சைட் டிஸைன் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமே உங்களுக்கு இருக்காது. உங்களது வெப்சைட்டினை சிறந்த முறையல் டிஸைன் செய்துகொடுப்பது எங்களின் பொறுப்பு.

பேமென்ட் கேட்வே (Payment Gatemway)

பேமென்ட் கேட்வே என்பது நமது ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும்பொழுது அந்த பொருட்களுக்கு உண்டான தொகையினை அவர்களது ATM Card / Debit card / Credit Card / Net Banking / PayPal மூலமாக செலுத்தத உதவும் சேவைதான் பேமென்ட் கேட்வே.

CCAvenue நிறுவனம் இந்த பேமென்ட் கேட்வே சேவையினை இலவசமாகவே வழங்கி வருகின்றனர். CCAvenue இல் பேமென்ட் கேட்வே பெற கீழ்கண்ட சான்றுகள் நம்மிடம் இருக்க வேண்டும்.

உங்களுடைய சான்றுகள்,
  • குடும்ப அட்டை
  • டிரைவிங் லைசென்ஸ் (or) வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு விபரங்கள்
கொஞ்சம் பெரிய அளவில் செய்வதென்றால் மட்டுமே நிறுவனத்திற்கான சான்றுகள் தேவைப்படும். ஆரம்பத்தில் உங்களது சான்றுகளை வைத்து பேமென்ட் கேட்வே வாங்கி உபோயோகித்துக்கொள்ளலாம். பிறகு தொழில் நல்ல முன்னேற்றம் காணும் சமயத்தில் நிறுவனமாக ரிஜிஸ்டர் செய்து மாற்றிக்கொள்ளலாம்.

நிறுவனத்தின் சான்றுகள்,
  • நிறுவனம் ரெஜிஸ்டர் செய்யப்பட்டதற்கான சான்றுகள்
  • நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கு விபரங்கள் (Current Account)
  • Pan Card (or) TIN Number

நிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்வது எப்படி?

உங்கள் ஊரில் உள்ள ஆடிட்டர் யாராவது ஒருவரின் மூலமே உங்களது நிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம்.

சிறிய அளவில் முதலீடு போட்டு தொழில் துவங்குகிறீர்கள் என்றால் Private Limited என்றெல்லாம் ரெஜிஸ்டர் பண்ணவேண்டியதில்லை. ஆடிட்டரிடமே குறைந்த செலவில் செய்து தருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.

நிறுவனத்தின் பெயரில் Bank Account வாங்குவதற்காகத்தான் ரெஜிஸ்டர் செய்கின்றோம்  என்பதையும் நீங்கள் என்ன பொருட்களை விற்பனை செய்ய போகிறீர்கள் என்பதையும் ஆடிட்டரிடம் முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள்.

எங்களிடம் வெப்சைட் டிஸைன் பண்ண ஆர்டர் கொடுத்தவுதன் இந்த வேலைகளை துவங்கினீர்கள் என்றால் நாங்கள் டிஸைன் செய்து முடிக்கவும் நீங்கள் நிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்து Bank Account வாங்கவும் சரியாக இருக்கும்.

உடனே CCAvenueவிடம் Apply செய்து பேமென்ட் கேட்வே வாங்கி வெப்சைட்டில் இணைத்துவிடலாம்.

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி, போன் : (+91) 9486854880

Online Shopping Web Designing Service In Chennai, Best E Commerce Website Designing Company In Chennai

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment