போட்டோஷாப் னா என்ன அப்படிங்கறது கம்பியூட்டர் யூஸ் பண்ணுற எல்லாருக்கும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அப்படி தெரியாதவங்களுக்கும் ஈஸியா புரிஞ்சுக்குற மாதிரி சொல்லனும்னா, போட்டோஷாப் அப்படிங்கிறது போட்டோ (Photos, Images) எடிட் பண்ண யூஸ் ஆகுற ஒரு சாப்ட்வேர் ங்க.
இந்த சாப்ட்வேர் எதுக்கு யூஸ் ஆகுதுன்னு பாத்தீங்கன்னா, சிம்பிளா சொல்லனும்னா போட்டோக்களை எடிட் பண்ண போட்டோக்களை உருவாக்க. உதாரணத்துக்கு,
நாம போட்டோ எடுக்க போட்டோ ஸ்டுடியோ போறோம். அங்க வேலை செய்யுறவங்க போட்டோ எடுத்த பிறகு அந்த போட்டோவ கம்ப்யூட்டர்ல போட்டு கலர் மற்றும் சைஸ் எல்லாம் அட்ஜஸ் பண்ணுறத பார்த்து இருப்பீங்க. அங்க அவங்க யூஸ் பண்ற சாப்ட்வேர் போட்டோஷாப்தாங்க.
கல்யாணம், காதுகுத்து போன்ற விசேசங்களில் போட்டோ எடுப்பவர்களும் யூஸ் பண்ற சாப்ட்வேர் போட்டோஷாப்தாங்க.
பிரிண்டிங் பிரஸ் போன்ற இடங்களில் யூஸ் பண்ற சாப்ட்வேர் போட்டோஷாப்தாங்க.
இவை மட்டுமில்லாமல் இன்னும் பல துறைகளில் போட்டோஷாப் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இப்போது பல நிறுவனங்களில் வேலை செய்ய போட்டோஷாப்பும் ஒரு எக்ஸ்ட்ரா தகுதியாக கேட்கப்படுகிறது.
இந்த அளவுக்கு முக்கியமான போட்டோஷாப்பினை நாம் இன்னும் கற்றுக்கொள்ளாமல் இருக்கின்றோமே என்கின்ற கவலையே உங்களுக்கு வேண்டாம்.
ஸ்ரீ விக்னேஷ், நரேஷ் மற்றும் RGN Tamil போன்ற நண்பர்கள் மிகவும் எளிமையான முறையில் அதுவும் தமிழில் வீடியோ வாயிலாக நமக்கு போட்டோஷாப் கற்றுத்தருகின்றனர். ஒவ்வொருவர் கற்றுத்தரும் விதமானது ஒருவருக்கொருவர் மாறுபட்டு இருக்கும்.
கீழே உள்ள பயிற்சி வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து பயிற்சி செய்து பாருங்கள். பயிற்சி முடியும்போது நீங்களும் ஒரு நல்ல போட்டோஷாப் டிசைனராக எனது வாழ்த்துக்கள்...!
இந்த பயிற்சி வீடியோக்களை பார்த்து Photoshop Basic நன்றாக கற்றுக்கொண்ட பிறகு நீங்களே சொந்தாமாக ஏதாவது போட்டோஷாப்பில் முயற்சி செய்து பார்க்க YouTube மற்றும் Google உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உதாரணமாக ஒருவரின் போட்டோவில் அவரது தலைமுடியின் கலரை மாற்றவேண்டும் என்றால், YouTube மற்றும் Google இல் How To Change Hair Color In Photoshop என்று சர்ச் செய்தாலே போதும். போட்டோஷாப்பில் அனுபவம் வாய்ந்த பலர் அதை எப்படி செய்வது என்பதை விளக்கமாக கொடுத்திருப்பார்கள்.
ஸ்ரீ விக்னேஷ் இன் போட்டோஷாப் பயிற்சி வீடியோக்கள்
நரேஷ் இன் போட்டோஷாப் பயிற்சி வீடியோக்கள்
RGN Tamil இன் போட்டோஷாப் பயிற்சி வீடியோக்கள்
Photoshop Training In Tamil, Photoshop Tutorials In Tamil, Photoshop Training Tamil Nadu, Tamil Photoshop Training Online