இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

உங்கள் Blog ஐயும் வெப்சைட்டாக மாற்றலாம்...!




அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்...!

நம்மில் அநேகம் நண்பர்கள் அவர்களின் சொந்த உபயோகத்திற்காகவோ அல்லது அவர்களின் தொழில் பற்றியா விபரங்களை இடுவதற்க்காகவோ Blogger இல் இலவசமாக பிளாக் துவங்கி நடத்தி வருகின்றனர்.

ஆனால் மக்கள் பிளாக்குகளை பார்க்கும்போது ஒரு இரண்டாம் தர வெப்சைட்டாகவே பார்க்கின்றனர். ஏனென்றால் http://www.akavai.com என்று வருவதற்கும். http://akavai.blogspot.com என்று வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா நண்பர்களே. நமது இந்த Akavai.com கூட Blogger இல்தான் இயங்குகிறது. blogspot.com என்று வராத அளவிற்கு பெயரை மட்டுமே மாற்றியுள்ளேன்.

உங்களது blogspot.com ஐ சொந்தமாக வெப்சைடாக மாற்ற செலவு அதிகம் ஆகும் என்றெல்லாம் கவலைப்படவேண்டாம் நண்பர்களே. வருடத்திற்கு வெறும் Rs.569 மட்டுமே செலவாகும்.

நமது blogspot.com ஐ சொந்த வெப்சைட்டாக மாற்றுவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.

பின்வரும் இணைப்பினை கிளிக் செய்யவும் : https://zolahost.com/my/domainchecker.php

இணைப்பை கிளிக் செய்தவுடன் வரும் பக்கத்தில் உங்களுக்கு என்ன பெயரில் வெப்சைட் வேண்டுமோ அந்த பெயரை டைப் செய்து Check Availability கிளிக் செய்தால் அந்த பெயர் நாம் புக் பண்ண Available ஆக உள்ளதா அல்லது ஏற்கனவே வேறு யாராவது ரெஜிஸ்டர் செய்துவிட்டார்களா என்பதை காட்டும். உதாரணமாக நான் Sathiyamoorthi.com என்று சர்ச் செய்துள்ளேன்.

Available என்று Status காட்டினால் Order Now கிளிக் செய்து நமக்கான வெப்சைட்டினை புக் பண்ண ஆரம்பிக்கலாம்.



Order Now கிளிக் செய்த பிறகு வரும் பக்கத்தில் "DNS Management (Free) என்பதை டிக் செய்துகொள்ளவேண்டும்.

Nameservers இல் கீழுள்ளதைப்போல் dns1.zolahost.com , dns2.zolahost.com , dns3.zolahost.com , dns4.zolahost.com என்று கொடுத்து Update Cart கிளிக் செய்ய வேண்டும்.

Promotional Code கொடுக்க வேண்டியதில்லை. Checkout கிளிக் செய்யவும்.

பிறகு வரும் பக்கத்தில் உங்களது பெயர், முகவரி, ஈமெயில் அட்ரஸ் மற்றும் மொபைல் நம்பர் போன்ற விபரங்களை கொடுத்து பின் Complete Order கிளிக் பண்ணவும். இந்த விபரங்கள் எதற்க்காக என்றால், நீங்கள் புக் பண்ணபோகும் வெப்சைட்டினை மேனேஜ் செய்வதற்கு ஒரு அகௌன்ட் மேண்டுமல்லவா... அதற்காக.


அடுத்துவரும் பக்கத்தில் Pay Now கிளிக் செய்யவும். அது உங்களை பணம் கட்டுவதற்கான பக்கத்திற்கு அழைத்துச்செல்லும்.


பணம் செலுத்துவதற்கான பக்கத்தில் Credit Card, Debit Card (ATM Card) மற்றும் Net Banking மூலமாக பணம் செலுத்துவதற்கான ஆப்சன்கள் தரபட்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு விருப்பமான முறையில் பணம் கட்டலாம். உங்களிடம் இருந்து பணம் பெறப்பட்ட அடுத்த நொடி உங்களது வெப்சைட் புக் செய்யப்பட்டுவிடும்.

புக் செய்யப்பட வெப்சைட்டினை Blogger உடன் இணைப்பது எப்படி என்பதை இனி பார்ப்போம்.

உங்கள் Blogger Account இல் லாகின் செய்துகொண்டு எந்த Blog ஐ வெப்சைட்டாக மாற்ற விரும்புகிறீர்களோ அதற்க்கான Settings கிளிக் செய்யவும்.

Settings பக்கத்தில் Publishing க்கு கீழே +Setup a 3rd party URL for your blog என்பதை கிளிக் பண்ணவும்.

இப்பொழுது ஓப்பன் ஆகும் பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே புக் செய்த வெப்சைட்டின் பெயரை நான் கீழே உள்ள படத்தில் கொடுத்துள்ளது போல கொடுத்து Save பண்ணவும்.

Save கிளிக் செய்ததும் ஒரு Error காட்டும் மற்றும் அதற்க்கு கீழேயே ஒரு செட்டிங்ஸ்உம் காட்டும். இது எதற்கு என்றால் அந்த வெப்சைட்டை நாம்தான் புக் செய்துள்ளோம் என்பதனை Blogger உறுதி செய்துகொள்வதற்காக.

இங்கே கொடுத்துள்ள Settings ஐ நமது வெப்சைட் பதிவு செய்த ZolaHost அக்கௌன்ட் இல் கொடுக்க வேண்டும்.

https://zolahost.com/my/clientarea.php?action=domains பக்கத்திற்கு செல்லவும் அல்லது படத்தில் காட்டியுள்ளவாறு My Account இல் My Domains கிளிக் பண்ணவும்.

இந்த பக்கத்தில் நீங்கள் புக்செய்துவைத்துள்ள வெப்சைட்டுகள் வரிசையாக தோன்றும். அதில் நீங்கள் இப்போது Blogger இல் இணைக்கபோகும் வெப்சைட்டின் Manage Domain கிளிக் பண்ணவும்.



இப்பொழுது வரும் பக்கத்தில் Management Tools கிளிக் செய்து Manage DNS கிளிக் செய்யவும்.



Host Namme : www | Record Type : CNAME (Alias)  | Address : ghs.google.com
Host Namme : @ | Record Type : CNAME (Alias)  | Address : ghs.google.com

இந்த இரண்டு Settings களும் Blogger இணைக்கப்போகும் அனைத்து வேப்சைட்டுகளுக்கும் பொதுவானதே.

மூன்றாவதாக ஒன்றும் புரியாததுபோல் குழப்பியதுபோல் வரும் Settings தான் வெப்சைட்டிற்கு வெப்சைட் மாறுபடும்.

மூன்றையும் ஒவொன்றாக Add செய்து Save பண்ணவும். இந்த மூன்றிலுமே Priority கொடுக்கவேண்டியதில்லை.

ஐந்து நிமிடங்கள் கழித்து Blogger இல் முன்பு கொடுத்ததுபோல் வெப்சைட் பெயர்கொடுத்து Save பண்ணவும். இப்பொழுது எந்த Error உம் காட்டாமல் Save ஆகிவிடும்.



உங்களது வெப்சைட் ஆனது Blogger உடன் இணைந்த பிறகு மேலே உள்ளபடத்தில் காட்டியுள்ள இடத்தில் Edit கிளிக் செய்யவேண்டும். பிறகு தோன்றும் பக்கத்தில் கீழேயுள்ள படத்தில் காட்டியுள்ளவாறு டிக் செய்து Save பண்ணவும்.

இது எதற்கு என்றால், உங்கள் வெப்சைட்டிற்கு முன்னால் WWW போட்டாலும் WWW போடாவிட்டாலும் எந்த பிரச்னையும் இல்லாமல் சரியாக வேலை செய்வதற்கே ஆகும்.


உங்கள் நண்பர்கள் யாரேனும் Blog வைத்திருந்தால் அவர்களுக்கும் இந்த செய்தியினை தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...!

இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் Comment மூலமாக தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...!

Tags : Domain For Blogger, Domain Name For Blogspot, How To Change Blogger To Own Website, How To Convert Blogspot To Own Website.
மேலும் படிக்க »

இலவசமாக பில் போட ஒரு சாப்ட்வேர்....!



வணக்கம் நண்பர்களே...!

நம்மில் தொழில் செய்துவரும் அனைவருக்கும் பில் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். பெரிய அளவில் மற்றும் நடுத்தர அளவில் தொழில் செய்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பில் போட்டு தருவதற்காக பில் புக்குகளை அச்சடித்து வைத்திருப்பார்.

ஆனால் அனேகம் தொழில்களுக்கு பில் புக் என்பது பயன்படாது. ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் ஒருவருக்கு டேட்டா என்ட்ரி அல்லது வெப் டிசைனிங் போன்ற வேலைகளை முடித்து தருகிறீர்கள் அல்லது எதோ ஒன்றிற்கு ட்ரையினிங் தருகிறீர்கள் என்றால் அவர்கள் கட்டிய பணத்துக்கு அத்தாட்சியாக பில் போன்று ஏதாவது கேட்பார்கள் அல்லவா?

அதற்கென்று நம்மால் தனியாக பில் புக் அடிப்பது என்பது இயலாத காரியம். நமக்கு தற்போது ஆன்லைனிலேயே பில் போட்டு பிரின்ட் எடுத்துக்கொள்ளும் சேவை இலவசமாகவே கிடைக்கின்றது. இந்த சேவையை பயன்படுத்தி நாமே பில் போட்டுக்கொள்ளளலாம் அல்லது PDF ஆக டவுன்லோட் செய்துகூட வாடிக்கையாளருக்கு மெயில் மூலமாக அனுப்பிவிடலாம்.

சிறப்பம்சங்கள்

  • எவ்வளவு பொருட்களை வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • எவ்வளவு பில் வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம்
  • பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம் மற்றும் PDF ஆக டவுன்லோட் செய்தும் கொள்ளலாம்
  • இன்டர்நெட் கனெக்சன் மட்டும் இருந்தால் போதும், எங்கிருந்து வேண்டுமென்றாலும் இந்த சேவையை உபயோகிக்க முடியும்.
இந்த சேவையினை உபயோகிக்க இங்கே கிளிக் பண்ணவும்

நீங்களும் ஒருமுறை இந்த சேவையினை உபயோகித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை எழுதுங்கள் நண்பர்களே...!

Tags : Online Invoice Generator, Web Based Invoice Builder, Free Invoice Generator Online
மேலும் படிக்க »

WelcomeDelivery.com - மளிகை பொருட்களை மலிவான விலையில் வாங்கலாம் வாங்க...!


அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்...!

சென்னையை சேர்ந்த எனது நண்பர் ஒருவர் மளிகை பொருட்களை வெப்சைட் மூலமாக விற்கும் தொழிலினை புதிய முயற்சியாக துவங்கியுள்ளார். அனைத்து விதமான மளிகை பொருட்களையும் MRP விலையைவிட குறைந்த விலையில் கொடுப்பதே அவரது நோக்கமாகும். அதன்படிதான் அனைத்து பொருட்களையும் சலுகை விலையில் விற்றும் வருகிறார்.

தற்போதைய நிலையில் சென்னையில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இவரது இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் சென்னையின் அனைத்து பாகங்களுக்கும் சேவையை விரிவுபடுத்தும் திட்டமும் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, மளிகை பொருட்களைப்போல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் ஆடைகளையும் சலுகை விலையில் கொடுக்கும் திட்டமும் வைத்துள்ளார்.

WelcomeDelivery.com இன் சேவை கிடைக்கப்பெறும் பகுதிகள்.

  1. Peramanur
  2. Singa Perumal Koil
  3. Maramalai Nagar
  4. Mahindracity
  5. Kattankulathur
  6. Potheri
இந்த பகுதிகளில் இருந்து கிடைக்கும் வரவேற்பினை பொருத்து மற்றபகுதிகளுக்கும் WelcomeDelivery சேவையினை விரிவுபடுத்த திட்டம் வைத்துள்ளனர். உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாராவது இந்த பகுதிகளில் வசித்து வந்தால் அவர்களிடம் இந்த தகவலினை பகிர்ந்துகொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கு உதவி செய்தது போலவும் இருக்கும் ஒரு புதிய சேவையினை ஊக்குவித்தது போலவும் இருக்கும்.

WelcomeDelivery இன் சிறப்பம்சங்கள்:

சலுகை விலையில் பொருட்கள் : அனைத்து பொருட்களும் சலுகை விலையில் கிடைக்கும். குறைந்த அளவில் பொருட்களை வாங்குபவர்களுக்கு சேமிக்கும் பணத்தின் அளவு குறைவு என்றாலும் அதிக அளவில் பொருட்களை வாங்குபவர்களுக்கு நிச்சயம் சேமிக்கும் பணத்தின் அளவு அதிமாக இருக்கும்.

எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை : நமக்கு தேவையான பொருட்களை வாங்க கடையாக ஏறி இறங்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே மொபைல் மூலமாகவோ அல்லது கம்பயூட்டர் மூலமாகவோ எளிதில் உங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் கொடுத்துவிடலாம்.

நேரம் மிச்சம் : நீங்கள் நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்களை ஆர்டர் கொடுக்கும்போது கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வெகு நேரம் வீணாகும். இதற்க்கு கடை நிர்வாகத்தையோ அல்லது அங்கு வேலை பார்பவர்களையோ குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொரு கஸ்டமரிடமும் தனித்தனியாக ஆர்டர் எடுத்து அவர்களை ஒவ்வொருவராக அனுப்ப லேட் ஆகும்.

ஆனால் WelcomeDelivery பொறுத்தவரையில் அனைத்து பொருட்களும் அவர்களது இணையதளமான WelcomeDelivery.com இல் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை எளிதில் கிளிக் செய்வதன் மூலம் ஆர்டர் செய்துவிடலாம். இதனால் உங்களுக்கு அலைச்சலும் நேரமும் மிச்சமாகிறது.

வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் (Door Delivery) : WelcomeDelivery இல் நீங்கள் பொருட்களை ஆர்டர் செய்தபிறகு நாம் ஆர்டர் செய்த பொருட்களை யார் வீட்டுக்கு கொண்டு வருவார்கள் என்று நீங்கள் கவலை கொள்ளத்தேவையில்லை. நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் அனைத்தும் உங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து தரப்படும்.

பொருள் வந்தவுடன் பணம் கொடுத்தால் போதும் (Cash On Delivery) : நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் உங்கள் வீட்டுக்கு வரும் முன்னரே பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பொருட்களை உங்களிடம் ஒப்படைத்தபிறகு பணம் கொடுத்தால் போதும்.

WelcomeDelivery வெப்சைட்டிற்கு செல்ல : WelcomeDelivery.com

Tags : Online Stores In Chennai, Online Grocery Stores In Chennai, Online Grocery Shops In Tamil Nadu, How To Purchase Grocery Products Online, How To Purchase Kitchen Items Online In Tamil Nadu
மேலும் படிக்க »

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்...!


விவசாயம் செழித்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் பன்மடங்கு பெருகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே உணவுப்பொருட்களுக்காக நாம் எந்த நாட்டிடமும் கையேந்தி நிற்கவேண்டிய அவசியமும் ஏற்படாது.

நமது நாட்டில் வருடத்தின் 90% நாட்களில் சூரிய ஒளி கண்டிப்பாக கிடைத்துக்கொண்டேதான் உள்ளது. மின்தட்டுப்பாட்டை போக்க ஒரேவழி சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது மட்டுமே. மின் தட்டுப்பாட்டினால் அவதிப்படும்  விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எண்ணுகின்றேன்.

சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.
ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.

20 சதவிகிதம் மட்டும் கட்டினால் போதுமானது என்கிற பொழுது மொத்த செலவே ரூ.100000 க்கும் குறைவாகவே வரும்.

தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.

மின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.

நானும் கீழே உள்ள போன் நம்பருக்கு தொடர்புகொண்டு விசாரித்து பார்த்தேன். அவர்கள் உங்கள் தாலுக்கவிலுள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளுங்கள். செல்லும்போது சிட்டா அடங்கல் மற்றும் வாய்தா ரசீது உடன் கொண்டு செல்லுங்கள் என்றும் கூறினார். நானும் இன்னும் ஓரிரு நாட்களில் சென்று விசாரித்து பார்க்கலாம் என்று இருக்கின்றேன்..

கூடுதல் தகவல்களுக்கு:
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone - 044 - 2435 2686, 044- 2435 2622
email : aedce.tn@nic.in
http://www.aed.tn.gov.in/SS_Solar_pumps.htm
http://www.aed.tn.gov.in/

Solar Water Pumps In Tamil Nadu, Free Solar Water Pump In Tamil Nadu, Tamil Nadu Government Solar Water Pumps
மேலும் படிக்க »

தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய கொஞ்சம் மாத்தியோசிங்க....?


தற்போதைய நிலையில் ஒவ்வொரு தொழிலும் உள்ள போட்டியினை கணக்கிட்டு பார்த்தால் புதிதாக தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு கண்ணை கட்டும் அளவிற்கு போட்டியாளர்கள் அவர்களுக்கு முன்னால் இருப்பார்.

ஆனாலும் புதிய ஐடியாக்களும் முயற்சியும் உங்களிடம் இருந்தாலே போதும் நீங்கள்தான் அந்த தொழிலில் சூப்பர்ஸ்டார். காலத்திற்கு தகுந்தாற்போல் புதிய ஐடியாக்களை நீங்கள்தான் நன்றாக யோசித்து செயல்படுத்தவேண்டும்.

அதற்க்கு சிறந்த உதாரணமாக கீழே உள்ள படத்தை பார்த்துவிட்டு நான் எழுதியுள்ள விஷயத்தை படியுங்கள் உங்களுக்கே நன்றாக விளங்கும்.


மேலே உள்ள படத்தை பார்த்தவுடன் சாதரணமாக யோசிப்பவர்களுக்கு என்னடா இவனுக இப்படி கிறுக்குத்தனமா பண்ணிட்டு இருக்கானுகன்னு தோணும். அதே கொஞ்சம் அட்வான்சா திங்க் பண்ணுறவங்க எப்படி யோசிப்பாங்கன்னா,

"அந்த அந்த நடிகர்களின் ரசிகர்கள் அவர்களது அபிமான ரசிகர்களின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்த இந்த மாதிரி பண்ணுகின்றனர். ஒரு நடிகரின் படம் ரிலீஸ் ஆகும்போது இந்த படத்தில் உள்ளதுபோல் ஸ்டிக்கர்களும் பேனர்களும் பிரின்ட் போட்டு தரும்போது பிரிண்டிங் தொழில் செய்பவர்களுக்கு சேல்ஸ் அதிகமாகும் வருமானமும் அதிகமாகும்."

இதேபோல் உங்கள் தொழில் சம்பந்தமாக கொஞ்சம் மாத்தி யோசிச்சு பாருங்க நண்பர்களே...! வெற்றி உங்களுடையதே...!

Business Improvement Tips In Tamil, Successful Business Tips In Tamil Language, How To Promote A Business In Tamil Nadu
மேலும் படிக்க »