இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு வழிகாட்டும் ஒரு முயற்சி...!


அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்...!

கல்லூரி படிப்பினை முடித்தவுடன் வேலை கிடைத்துவிடும் படிப்பிற்கு வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்கிற கனவுகளுடன் கல்லூரிபடிப்பை முடித்துவரும் மாணவர்களுக்கு கிடைக்கும் முதல் ஏமாற்றமே கேம்பஸ் இன்டர்வியூ வில் வரும் பல கம்பெனிகளும் ஒருசிலரை மட்டும் எடுத்துவிட்டு மற்றவர்களுக்கு டாட்டா காட்டிவிடுவதுதான்.

கேம்பஸ் இன்டர்வியூ போனால் போகட்டும் சொந்த முயற்ச்சியில் வேலை தேடலாம் என்று பல கம்பனிகள் ஏறி இறங்கினால் கடைசியாக கிடைக்கும் வேலையோ ஆறாயிரம் ஏழாயிரம் என்கிற சொற்ப சம்பளத்தில். நான்கு இலட்சம் செலவுசெய்து படித்து ஆறாயிரம் ஏழாயிரம் சம்பளம் வாங்கினால் அது வட்டிகட்டகூட பத்தாது என்பதுதான் உண்மை நிலை.

அவர்களது திறமைக்கு தகுந்த வேலையினை பெற நம்மால் முடிந்த உதவியினை செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். இதற்கென புதியதாக ஒரு வெப்சைட் ஆரம்பித்து வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை அதன் மூலம் பப்ளிஷ் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளேன். இந்த வேப்சைட்டானது யார் வேண்டுமானாலும் இணைந்து அவர்களுக்கு தெரிந்த வேலைவாய்ப்புகளைப்பற்றிய விபரங்களை பதிவுடும் சிறப்பம்சத்துடனும் இருக்கும்.

ஏனென்றால் என் ஒருவனால் மட்டுமே அனைவருக்கும் தேவைப்படும் வேலைவாய்ப்புகளை திரட்டி தரமுடியாது. நான் வேலை செய்யும் நிறுவனத்திலோ அல்லது எனது நண்பர்கள் வேலை செய்யும் நிறுவனத்திலோ இருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் நான் கேள்விப்படும் வேலைவாய்ப்புகள் தொடர்பான விபரங்களை பதிவிட முடியும். அதேபோல் நீங்களும் நீங்கள் செய்யும் நிறுவனத்திலோ அல்லது உங்களது  நண்பர்கள் வேலை செய்யும் நிறுவனத்திலோ இருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் நீங்கள்  கேள்விப்படும் வேலைவாய்ப்புகள் தொடர்பான விபரங்களையும் பதிவிட முடியும்.

அதேசமயம் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களும் அவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அவர்களது Resume ஐ அப்லோட் செய்ய முடியும். வேலைக்கு ஆட்கள் தேவைப்படுபவர்களும் Resume ஐ பார்த்து அவர்களுக்கே தேவையான அவர்களது வேலைக்கு தகுந்த நபர்களை எடுத்துக்கொள்ள முடியும்.

இதுதான் நண்பர்களே எனது PLAN. உங்களது யோசனைகளும் கருத்துக்களும் வரவேற்க்கப்படுகின்றன. எனது இந்த முயற்சி பற்றிய உங்களது கருத்துக்களையும் யோசனைகளையும் இங்கே கீழே உள்ள Comments மூலம் தெரிவிக்கலாம். எனக்குதோன்றாத ஏதாவது புதிய ஐடியாக்கள் உங்கள் மனதிலும் இருக்கலாம் அல்லவா நண்பர்களே...?

அதேபோல் என்னுடன் இணைந்து செயல்பட விரும்பும் நண்பர்களும் Email மூலம் தெரிவிக்கலாம். வெப்சைட் கிரியேட் செய்வது அதனை டிசைன் செய்வது போன்றவற்றை நான் கவனித்துக்கொள்வேன். வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை பதிய உங்களின் உதவியும் தேவைப்படுகின்றது நண்பர்களே...!

எனது ஈமெயில் : p.sathikdm@gmail.com

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


3 comments:

Unknown said...

I welcomed this

MANI said...

nice

Unknown said...

I like to join to u sir

Post a Comment