இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

ஹெல்மெட் அனாவசியமா...? அத்தியாவசியமா...?


வணக்கம் நண்பர்களே...!

தற்போது தமிழ் நாட்டில் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றாகிவிட்டது. இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் லைசென்சை இழக்க நேரிடும் என்பதும் புதிய பிரச்சினையாக உள்ளது.

அபராதம் மட்டும் கட்டினாலும் இரண்டு அல்லது மூன்று முறை அபராதம் கட்டும் தொகையில் ஒரு நல்ல ஹெல்மெட் வாங்கிவிடலாம்.

ஹெல்மெட் என்பது ஒன்றும் தவறான மற்றும் யாரும் உபோகிக்காத ஒன்று கிடையாதே. பலரும் ஹெல்மெட் அணிந்துகொண்டு வண்டி ஓட்டுவதை நீங்களே கண்கூடாக பார்த்திருப்பீர்கள். அவர்கள் அனைவரும் யாரும் கட்டாயப்படுத்தி ஹெல்மெட் போட்டு வண்டி ஒட்டவில்லை.

தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பது அவர்களுக்கு தெரிந்துள்ளதால் அவர்கள் பாதுகாப்பிற்காக அவர்களே ஹெல்மெட் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இப்பொழுது இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்துகொண்டுதான்  வண்டி ஒட்டவேண்டும் என்று நீதிமன்றம் சட்டம் போட்டுள்ளது, அவ்வளவுதான்.

எது எப்படியோ, ஹெல்மெட் என்பது நமது தலையில் அடிபடாமல் காக்கும் அத்தியாவசியமான ஒரு உபகரணம் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

அதிலும் ISI முத்திரை உள்ள ஹெல்மெட் எதற்காக வாங்கவேண்டும். ஏன் என்றால் ISI முத்திரை உள்ள ஹெல்மெட் மட்டுமே நம்பகத்தன்மை உடையாகவும் மிகவும் தரமானதாகவும் இருக்கும்.

சிம்பிளாக சொல்ல மீண்டும் என்றால் ISI முத்திரை உள்ள ஹெல்மெட்டுகள் நோக்கியா, சாம்சங், சோனி போல. ISI முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் சைனா மொபைல் போன் போல.

ஹெல்மெட் எங்கு வாங்கலாம்...? எப்படி வாங்கலாம்...?

தரமான ஹெல்மெட் இப்போது அனைத்து சிறிய மற்றும் பெரிய நகரங்களிலும் கிடைக்க ஆரம்பித்து விட்டது. ரோட்டோரமாக விற்கும் தரமில்லாத ஹெல்மெட்டுகளை வாங்குவதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். ஏனென்றால் இது ஒன்றும் சீப்போ கண்ணாடியோ இல்லை எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம் வாங்கலாம் என்பதற்கு.

ஹெல்மெட் பற்றிய உங்களது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Best Helmet In Tamil Nadu, High Quality Helmet In Chennai, Best Quality Helmets In Tamil Nadu, How To Buy Helmets In Tamil Nadu

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


2 comments:

Unknown said...

Article Nice Talk Respect You By Best Web Design Cochin

Unknown said...

What a Article Nice Talk Respect you low cost web design kochi

Post a Comment