இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

தொழிலை எளியவழியில் விளம்பரப்படுத்த / சந்தைப்படுத்த - தொழில் முன்னேற்ற குறிப்புகள்



நம்மில் பலரும் பல்வேறுவிதமான தொழில்களை செய்துவருகின்றோம். தொழில் எதுவாக இருந்தாலும் அவற்றை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்வது தரம் மற்றும் சந்தைப்படுத்துதல் எனும் இரண்டே விஷயங்கள்தான்.

தரம்

நாம் தயாரிக்கும் பொருள் அல்லது வழங்கும் சேவையின் தரம் நம் தொழிலுக்கென்று நிரந்தர வாடிக்கையாளர்களை கொண்டுவந்து தரும். எப்படியும் தரம் குறைந்த சேவையினை வழங்கி யாரும் வாடிக்கையாளர்களை இழக்க விரும்புவதில்லை. அதனால் தொழிலில் வெற்றியடைய விரும்பும் யாரும் தரமற்ற சேவையினை வழங்கப்போவதில்லை.

சந்தைப்படுத்துதல்

போட்டிகள் நிறைந்த உலகில் நாம் தயாரிக்கும் பொருள் அல்லது வழங்கும் சேவையினை சந்தைப்படுத்துதல்தான் இங்கு மிகவும் சவாலான விஷயமே. உங்களது சேவையினை அது தேவைப்படும் மக்களிடம் கொண்டுசென்றுவிட்டாலே போதும் தொழிலில் 75% வெற்றி உறுதியாவிடும்.

காற்று புகமுடியாத இடத்திலும் புகுந்து உலகையே தன்கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி புரியும் இன்டர்நெட்டினை சரியான முறையில் உபயோகப்படுத்தினாலே போதும், நம் தொழிலை எங்கோ கொண்டு சென்றுவிடலாம். பின்வரும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றினாலே போதும் வேறு எதுவும் பெரிதாக செய்யவேண்டியதில்லை.

1.வெப்சைட்


நாம் ஏதாவது ஒரு தொழில் செய்கின்றோம் என்றால் அதற்கு வெப்சைட் என்பது இன்றியமையாத ஒன்று. இன்டர்நெட் இன்றி எதுவும் இல்லை என்கிற இந்த காலத்தில் வெப்சைட் என்பதும் ஒரு விசிட்டிங் கார்டு போலத்தான். ஆயிரம் ரூபாயில் நம் தொழிலுக்கென அழகிய வடிவமைப்புடன் கூடிய வெப்சைட்டினை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும். வெப்சைட் உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

2.கூகிள் மேப்

கூகிள் மேப் என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. வெளியூர்களுக்கு செல்லும்போது நமக்கு தேவைப்படும் பொருட்கள் எங்கு கிடைக்கும் மற்றும் நாம் போகவேண்டிய இடம் எங்கு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள கூகிள் மேப் உதவியாக உள்ளது.

கூகிள் பிசினஸ் மேப்பில் நம் தொழில் பற்றிய முழு விவரங்களுடன் இணைத்துவிடவேண்டும். நாம் கொடுத்துள்ள முகவரி சரியனதா என்று சரிபார்க்க நமக்கு தபாலில் ஒரு கோட் அனுப்புவார்கள். அதனை அவர்கள் கூறியுள்ளவாறு உறுதி செய்துவிட்டால் போதும் நமது தொழிலும் கூகிள் மேப்பில் வந்துவிடும்.

அதன் பிறகு நம் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பாக  யார் கூகிளில் சர்ச் செய்தாலும் அல்லது கூகிள் மேப்பில் சர்ச் செய்தாலும் நம் நிறுவனத்தின் விபரங்கள் காட்டும். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தினை பார்க்கவும்.


3.பிசினஸ் டைரக்டரீஸ்

பிசினஸ் டைரக்டரீஸ் என்பது வாடிக்கையாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும் வெப்சைட்டுகள் ஆகும். இந்த வெப்சைட்டுகளில் நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் சேவைகளைப்பற்றியும், தயாரிப்புகளைப்பற்றியும் பதிவுசெய்வர்.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானவற்றை இந்த வெப்சைட்டுகளில் தேடிப்பார்ப்பர். அதன் மூலம் வாடிக்கையாளருக்கும் அவருக்கு தேவைப்படும் சேவை அல்லது பொருளினை யார்யாரெல்லாம் தருகிறார்கள் என்கிற தகவல் கிடைக்கும். விற்பனையாளருக்கும் புதிய வாடிக்கையாளர்கள்  கிடைப்பார்கள்.

கீழ்காண்பவை இந்தியாவில் தலைசிறந்த பிசினஸ் டைரக்டரீஸ் வலைத்தளங்கள் ஆகும். இவற்றில் உங்கள் தொழிலின் பெயரில் கணக்கினை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அதில் உங்கள் நிறுவனம் வழங்கும் சேவைகள் மற்றும் நிறுவனத்தின் தயாரிப்புகளை பற்றிய முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்துகொள்ளுங்கள்.

  1. indiamart.com
  2. tradeindia.com
  3. bharathlisting.com
  4. yellowpages.in
  5. jimtrade.com
  6. yelu.in
  7. eindiabusiness.com
  8. findinall.com
  9. go4worldbusiness.com
  10. 99corporates.com

4.பேஸ்புக் குரூப்புகள் 

தொழில் தொடர்பான பேஸ்புக் குரூப்புகள் எவ்வளவோ உள்ளன. ஒருசில குரூப்புகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் இருப்பார்கள். பத்தாயிரம் நபர்களுக்கு அதிகமாக இருக்கும் பேஸ்புக் குரூப்புகளில் உறுப்பினராக இணைந்துகொள்ள வேண்டும். அதில், உங்கள் நிறுவனம் வழங்கும் சேவைகள் மற்றும் நிறுவனத்தின் தயாரிப்புகளை பற்றிய முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும். இதன் மூலம் உங்களது தொழிலை விளம்பரப்படுத்தி மேலும் பல வாடிக்கையாளர்களைப் பெறமுடியும்.



உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment