இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்ன?



ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்ன என்பதை நாம் இந்த பதிவில் காண்போம்.

ஒவ்வொரு ஊரிலும் கடைவைத்து வியாபாரம் செய்வதெல்லாம் ஓல்டு பேஷனாகிவிட்டது, ஆன்லைனில் கடைவைத்து வியாபாரம் செய்வதே நியூ ட்ரென்ட் என்றாகிவிட்டது. இன்டர்நெட்டில் கடைவிரித்து வியாபாரம் செய்வதைத்தான் நாம் ஆன்லைன் ஷாப்பிங் என்று அழைக்கின்றோம்.

ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளின் நோக்கமே பொருட்களை இன்டர்நெட் மூலம் விற்று பணம் சம்பாதிப்பதே ஆகும். இன்டர்நெட் வளராத காலகட்டங்களில் ஏதாவது ஒரு பொருள் வாங்கவேண்டும் என்றால் அது கிடைக்கும் கடைகளுக்கு நேரில் சென்று தேடி பார்த்துதான் வாங்கவேண்டும்.

ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை, பல நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளை ஆரம்பித்து பொருட்களை விற்பதால் மக்களுக்கும் தங்களுக்கு வேண்டிய பொருளை எங்கும் சென்று தேடியலையாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வாங்கி விடுகின்றனர்.

Flipkart.cam, Snapdeal.com, EBay.com போன்ற வெப்சைட்டுகளை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளுக்கு சிறந்த முன்னுதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம். இதுபோல பல ஆயிரக்கணக்கான ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டுள்ளன.

ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளின் சிறப்பம்சமே உலகின் எந்த மூலையில் உள்ளவர்கள் வேண்டுமானாலும் உங்களிடம் உள்ள பொருட்களை பற்றியும் அவற்றின் விலை நிலவரங்களையும் ஒரே கிளிக்கில் அறிந்துகொள்ளமுடியும் என்பதுதான். அவர்களுக்கு தேவையான பொருள் உங்களிடம் உள்ளதா என்பதனை சர்ச் செய்தும் தெரிந்துகொள்ளலாம்.

அவருக்கு தேவைப்படும் பொருள் தங்களிடம் இருக்கும்பட்சத்தில் ஒரே கிளிக்கில் ஆர்டர் செய்து ATM Card / Debit card / Credit Card / Net Banking / PayPal மூலமாக பணம் செலுத்தி அவருக்கு தேவையான பொருளினை பெற்றுக்கொள்ளலாம்.

நாங்கள் உங்களுக்கு டிசைன் செய்துகொடுக்கும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டின் முக்கிய அம்சங்கள்,


  • நாங்கள் உங்களுக்கு அளிக்கும் Control Panel ஆனது யார் வேண்டுமானாலும் மிகவும் எளிய முறையில் கையாளும்வண்ணம் இருக்கும்.
  • நீங்களே எவ்வளவு பொருட்களுக்கான விபரங்களை வேண்டுமென்றாலும் பதிவுசெய்துகொள்ளலாம்.
  • எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த விபரங்களை எடிட் செய்தும் கொள்ளலாம்.
  • Special Offer மற்றும் Discount கொடுக்கலாம்.
  • வாடிக்கையாளர்கள் ATM Card / Debit card / Credit Card / Net Banking / PayPal மூலமாக பணம் செலுத்தலாம்.
  • Mobile, Tablet, LapTop மற்றும் Computer என அனைத்திலும் அவற்றிக்கு தகுந்தவாறு Open ஆகும்படி இருக்கும்.
உங்களுக்கும் ஒரு ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் உருவாக்கும் எண்ணம் இருந்தால் அதற்க்கு என்ன என்ன செய்யவேண்டும் என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி, போன் : (+91) 9486854880

E commerce Web Designing Service In Tamil Nadu, Online Shopping Website Designing Service In Tamil Nadu, Tamil Web Designing Company, The Best Web Designing Company In Tamil Nadu
மேலும் படிக்க »

ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் நிறுவ என்ன என்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?


ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்னவென்பதை முந்தைய பதிவிலேயே பார்த்துவிட்டோம். ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

உங்களுக்கும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் ஒன்றினை துவங்கும் எண்ணம் இருப்பின் நீங்கள் கண்டிப்பாக கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றியே ஆகவேண்டும்.

வெப்சைட் டிஸைன்

வெப்சைட் டிஸைன் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமே உங்களுக்கு இருக்காது. உங்களது வெப்சைட்டினை சிறந்த முறையல் டிஸைன் செய்துகொடுப்பது எங்களின் பொறுப்பு.

பேமென்ட் கேட்வே (Payment Gatemway)

பேமென்ட் கேட்வே என்பது நமது ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும்பொழுது அந்த பொருட்களுக்கு உண்டான தொகையினை அவர்களது ATM Card / Debit card / Credit Card / Net Banking / PayPal மூலமாக செலுத்தத உதவும் சேவைதான் பேமென்ட் கேட்வே.

CCAvenue நிறுவனம் இந்த பேமென்ட் கேட்வே சேவையினை இலவசமாகவே வழங்கி வருகின்றனர். CCAvenue இல் பேமென்ட் கேட்வே பெற கீழ்கண்ட சான்றுகள் நம்மிடம் இருக்க வேண்டும்.

உங்களுடைய சான்றுகள்,
  • குடும்ப அட்டை
  • டிரைவிங் லைசென்ஸ் (or) வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு விபரங்கள்
கொஞ்சம் பெரிய அளவில் செய்வதென்றால் மட்டுமே நிறுவனத்திற்கான சான்றுகள் தேவைப்படும். ஆரம்பத்தில் உங்களது சான்றுகளை வைத்து பேமென்ட் கேட்வே வாங்கி உபோயோகித்துக்கொள்ளலாம். பிறகு தொழில் நல்ல முன்னேற்றம் காணும் சமயத்தில் நிறுவனமாக ரிஜிஸ்டர் செய்து மாற்றிக்கொள்ளலாம்.

நிறுவனத்தின் சான்றுகள்,
  • நிறுவனம் ரெஜிஸ்டர் செய்யப்பட்டதற்கான சான்றுகள்
  • நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கு விபரங்கள் (Current Account)
  • Pan Card (or) TIN Number

நிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்வது எப்படி?

உங்கள் ஊரில் உள்ள ஆடிட்டர் யாராவது ஒருவரின் மூலமே உங்களது நிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம்.

சிறிய அளவில் முதலீடு போட்டு தொழில் துவங்குகிறீர்கள் என்றால் Private Limited என்றெல்லாம் ரெஜிஸ்டர் பண்ணவேண்டியதில்லை. ஆடிட்டரிடமே குறைந்த செலவில் செய்து தருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.

நிறுவனத்தின் பெயரில் Bank Account வாங்குவதற்காகத்தான் ரெஜிஸ்டர் செய்கின்றோம்  என்பதையும் நீங்கள் என்ன பொருட்களை விற்பனை செய்ய போகிறீர்கள் என்பதையும் ஆடிட்டரிடம் முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள்.

எங்களிடம் வெப்சைட் டிஸைன் பண்ண ஆர்டர் கொடுத்தவுதன் இந்த வேலைகளை துவங்கினீர்கள் என்றால் நாங்கள் டிஸைன் செய்து முடிக்கவும் நீங்கள் நிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்து Bank Account வாங்கவும் சரியாக இருக்கும்.

உடனே CCAvenueவிடம் Apply செய்து பேமென்ட் கேட்வே வாங்கி வெப்சைட்டில் இணைத்துவிடலாம்.

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி, போன் : (+91) 9486854880

Online Shopping Web Designing Service In Chennai, Best E Commerce Website Designing Company In Chennai
மேலும் படிக்க »